Powered By Blogger

புதன், 26 அக்டோபர், 2011

உரிந்த கைகள்

EROSIO INTERDIGITALIS BLASTOMYCETICA
இது நனைந்த கைகள் .சோப்புப் போடுவதால் ,விரலிடுக்கில் தோல் உரிதல் .
அதுவும் டம்ளர் கழுவுபவர்களுக்கு தான் பார்க்கிறேன்.
தீர்வு :கை முழுவதும் தேங்காய் எண்ணெய் தடவுதல் --டம்ளர் கழுவும் முன்பு 
[தோல் உரிந்த பின்பு அல்ல ] 

கொசுக்கடி கொப்பளங்கள் :

கொசுக்கடி கொப்பளங்கள் :
புறங்கை ,புறங்கால்,கை ,பாதம் ,விரல்கள் --இன் வெளிப்பக்கமாகக் காணப்படும் .
இது பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை மென்மையான தோல் உள்ளவர்கள் ,தும்மல் /ஆஸ்துமா உள்ளவர்கள் ,பெண்கள் ,கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அதிகமாக வரும் .

நிரந்தரத் தீர்வு --கொசுவலை உபயோகித்தல் .
உங்களது சுருள் ,வில்லை ,திரவ ,கிரீம் ,கொசு விரட்டிகள் முழுமையாகவும் ,நிரந்தரமாகவும் உதவாது 

காக்கும் வலை .


எங்களைக் காக்கும் வலை .
இது என் மகள் எடுத்தது .
கொசுவினால் பரவும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நான்கு காய்ச்சல்களில் இருந்து காப்பாற்றும் பாச வலை .

புதன், 19 அக்டோபர், 2011

சோப்பு போடுவது

சோப்பு போடுவது எல்லாருக்கும் பிடிக்கும்.அதற்காக இரண்டு தடவை ஒரே நேரத்தில் போட்டால் தோல் வறண்டு , வெடிப்பு வந்து விடும்.கன்னத்தில் வெண் புள்ளிகள் தோன்றலாம்.

பெண் வழுக்கை

கல்யாணத்திற்கு முன் 
கல்யாணத்திற்குப் பின் 
 பெண்களுக்கும் இப்போது வழுக்கை நிறைய பார்க்கிறேன்.அதுவும் கல்யாணம் ஆகாதவர்களுக்குத்தான் அதிகம் .ஆண் வழுக்கைக்கு தரும் லோஷன்களில் strength (2 %) கொடுத்தால் போதும்.

தோலில் போடக்கூடாத லோஷன்



                                                                                                                                                       

தோலில் போடக்கூடாத லோஷன் PODOWART.அதை மரு எடுப்பதற்காக தானே மருந்து கடைகளில் வாங்கி போட்டவர் நிலை இது.அந்த தழும்பு போவதற்கு பல வருடங்கள் ஆகலாம்.அது சரி , அந்த PODOWART பின் எதற்கு போடுவது?அது ஒரு 18 + பக்கத்தில் போடுவேன்..

முடி போச்சே




10 ம் வகுப்பு படிக்கும் போதும், 12  ம் வகுப்பு படிக்கும் போதும்,இந்த மாதிரி ஆகி விடுகிறார்கள் .மன அழுத்தம் அந்த அளவு.முடியை சுருட்டிக் கொண்டு படிப்பார்கள்.அப்படியே பிடுங்கி விடுவார்கள்.(சிலர் அம்மாவுக்கு தெரியக்கூடாது என்று விழுங்கி விடுவார்கள்-அது வயிற்றில் பந்து போல் சுருண்டு அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடும் ).

என்னிடம் வரும் போது இந்தப் பெண்கள் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.அம்மாவின் tension தான் சகிக்க முடியாததாய் இருக்கும்.ஏன் என்றால் எவ்வளவு மார்க் எடுப்பது,எவ்வளவு செலவு செய்கிறேன் ,நண்பியின் பெண் எவ்வளவு மார்க் எடுக்கிறாள் என்ற torture-ஐ கொடுப்பது அம்மா தான்.அப்பா பாவம் .

செவ்வாய், 11 அக்டோபர், 2011

SEAL LIMB

இந்த பையனின் அம்மாவுக்கு கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் வந்ததாம்.டாக்டர்-இடம் காட்டக்கூடாது என்று பாட்டி சொன்னாராம்.SEAL LIMB-உடன் பிறக்கும் குழந்தை நான் 25 வருடங்களுக்கு முன்பு படித்தது.பார்த்ததே இல்லை .ஏன் என்றால் ,அது THALIDOMIDE என்னும் மசக்கைக்கு சாப்பிட்ட மாத்திரையினால் வந்தது என்று கண்டு பிடித்து BAN செய்து விட்டார்கள்.
சிக்கன் பாக்ஸ்-ற்கு சிகிச்சை அளித்திருந்தால் இந்த குழந்தை சீல் போன்று பிறந்திருக்காது.அரசு மருத்துவமனையிலேயே விலை மதிப்புள்ள அந்த சிக்கன் பாக்ஸ் மருந்துகள் கிடைக்கின்றன.அந்த பையன் 3விரல்களிலேயே செல்போன் பிடித்து பேசவும்  செய்கிறார். 

சிறுத்தை

இது தான் சிறுத்தை தோல் .சொறிந்துசொறிந்து வெளுத்துப் போனதால் வந்த பெயர்.LEOPARD SKIN.

திங்கள், 3 அக்டோபர், 2011

புத்தரா??ரங்கநாதரா??

            கடந்த மாதம் குமரகம் சென்றிருந்தோம் .அங்குள்ள ரிசார்ட்டில் இந்த சிலையை பார்த்தவுடன் நம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவிக்க வேண்டியது  அவசியம் என்று நினைத்தேன்.வித்தேன்.