திங்கள், 7 நவம்பர், 2011
வெ ள்ளையும் வெயிலும்
இஇது அல்பிநிசம் என்ற நிற குறைவு நோய்.பிறவியிலேயே ஏற்படும் tyrosinase positive albinism என்பது. கண் கருவிழி,தோல் ,முடி ஆகிய இடங்களில் உள்ள நம் பாதுகாப்பு கவசம் மெலானின் குறைவாய் இருப்பதே காரணம் .இந்த வயதிலேயே வெயில் ஒவ்வாமை வந்து விட்டது.இவர்கள் மட்டும் வாழ்நாள் முழுவதும் SUNSCREEN போட வேண்டும் . TV விளம்பரம் பார்ப்பவர்கள் எல்லாம் அல்ல.
புதன், 26 அக்டோபர், 2011
கொசுக்கடி கொப்பளங்கள் :
புறங்கை ,புறங்கால்,கை ,பாதம் ,விரல்கள் --இன் வெளிப்பக்கமாகக் காணப்படும் .
இது பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை மென்மையான தோல் உள்ளவர்கள் ,தும்மல் /ஆஸ்துமா உள்ளவர்கள் ,பெண்கள் ,கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அதிகமாக வரும் .
நிரந்தரத் தீர்வு --கொசுவலை உபயோகித்தல் .
உங்களது சுருள் ,வில்லை ,திரவ ,கிரீம் ,கொசு விரட்டிகள் முழுமையாகவும் ,நிரந்தரமாகவும் உதவாது
புதன், 19 அக்டோபர், 2011
சோப்பு போடுவது
சோப்பு போடுவது எல்லாருக்கும் பிடிக்கும்.அதற்காக இரண்டு தடவை ஒரே நேரத்தில் போட்டால் தோல் வறண்டு , வெடிப்பு வந்து விடும்.கன்னத்தில் வெண் புள்ளிகள் தோன்றலாம்.
பெண் வழுக்கை
கல்யாணத்திற்கு முன் |
கல்யாணத்திற்குப் பின் |
தோலில் போடக்கூடாத லோஷன்
தோலில் போடக்கூடாத லோஷன் PODOWART.அதை மரு எடுப்பதற்காக தானே மருந்து கடைகளில் வாங்கி போட்டவர் நிலை இது.அந்த தழும்பு போவதற்கு பல வருடங்கள் ஆகலாம்.அது சரி , அந்த PODOWART பின் எதற்கு போடுவது?அது ஒரு 18 + பக்கத்தில் போடுவேன்..
முடி போச்சே
10 ம் வகுப்பு படிக்கும் போதும், 12 ம் வகுப்பு படிக்கும் போதும்,இந்த மாதிரி ஆகி விடுகிறார்கள் .மன அழுத்தம் அந்த அளவு.முடியை சுருட்டிக் கொண்டு படிப்பார்கள்.அப்படியே பிடுங்கி விடுவார்கள்.(சிலர் அம்மாவுக்கு தெரியக்கூடாது என்று விழுங்கி விடுவார்கள்-அது வயிற்றில் பந்து போல் சுருண்டு அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடும் ).
என்னிடம் வரும் போது இந்தப் பெண்கள் சிரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.அம்மாவின் tension தான் சகிக்க முடியாததாய் இருக்கும்.ஏன் என்றால் எவ்வளவு மார்க் எடுப்பது,எவ்வளவு செலவு செய்கிறேன் ,நண்பியின் பெண் எவ்வளவு மார்க் எடுக்கிறாள் என்ற torture-ஐ கொடுப்பது அம்மா தான்.அப்பா பாவம் .
செவ்வாய், 11 அக்டோபர், 2011
SEAL LIMB
இந்த பையனின் அம்மாவுக்கு கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் வந்ததாம்.டாக்டர்-இடம் காட்டக்கூடாது என்று பாட்டி சொன்னாராம்.SEAL LIMB-உடன் பிறக்கும் குழந்தை நான் 25 வருடங்களுக்கு முன்பு படித்தது.பார்த்ததே இல்லை .ஏன் என்றால் ,அது THALIDOMIDE என்னும் மசக்கைக்கு சாப்பிட்ட மாத்திரையினால் வந்தது என்று கண்டு பிடித்து BAN செய்து விட்டார்கள்.
சிக்கன் பாக்ஸ்-ற்கு சிகிச்சை அளித்திருந்தால் இந்த குழந்தை சீல் போன்று பிறந்திருக்காது.அரசு மருத்துவமனையிலேயே விலை மதிப்புள்ள அந்த சிக்கன் பாக்ஸ் மருந்துகள் கிடைக்கின்றன.அந்த பையன் 3விரல்களிலேயே செல்போன் பிடித்து பேசவும் செய்கிறார்.
திங்கள், 3 அக்டோபர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)